மதுரையில் கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி

WhatsApp-Image-2023-05-07-at-11.02.40.jpg

மதுரையில், சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் விடிய விடிய பக்தர்களுக்கு பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பிறகு, பல்வேறு திருக்கண்களுக்கு சென்று, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து, தேனூர் மண்டபம், வண்டியூர் ஆகிய பகுதிகளில் திருக்கண்களில், பக்தருக்கு அருள்பாலித்து விட்டு, மதுரை யாழப்பா நகர், அண்ணா நகர், மதிசியும் ஆகிய பகுதிகளில் திருக்கண்களுக்கு சென்று விட்டு இரவு 11 மணி அளவில், கள்ளழகர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து, மதுரை ராமராய மண்டபத்தில், மச்சா அவதாரம், கூர்மா அவதாரம் ,வாமன அவதாரம், ராமா அவதாரம் , கிருஷ்ணா அவதாரம், அமிர்தமோகினி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். மதுரையில், விடிய விடிய மழை பெய்தாலும், பக்தர்கள் கொட்டும் மழையில் சாலை ஓரமாக அமர்ந்து விடிய விடிய கள்ளழகரை
தரிசித்தனர் . இன்று இரவு பூப்பல்லாக்கில் அலங்காரமாகி, மதுரை புதூர் , சூர்யா நகர் வழியாக அழகர் மலைக்கு புறப்பட்டு செல்வார். கள்ளழகர், சித்திரை திருவிழா முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில், துணை ஆணையர் மு ராமசாமி, தக்கார் வெங்கடாசலம் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

scroll to top