மதுரையில், கல்லூரி மாணவிக்கு உதவிய தமிழக முதல்வர்

WhatsApp-Image-2021-10-30-at-12.46.37-PM.jpeg

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், திருவேடகத்தை சார்ந்த கல்லூரி மாணவியான மனோகரன் மகள் முருகேஸ்வரி.

இவர், மதுரையில் மீனாட்சி கல்லூரியில் படிக்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உதவி கோரியிருந்தார். இந்த நிலையில், மதுரை மீனாட்சி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடர வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்காக மாணவி முருகேஸ்வரி, நன்றி சொல்ல எண்ணி, தமிழக முதல்வரிடம், குடும்ப சூழ்நிலையை விளக்கியிருந்தார்.

இதையடுத்து, அவருடைய ஏழ்மை நிலையை கருதிய தமிழக முதல்வர், மதுரைக்கு அரசினர் விருந்தினர் மாளிகையில் குடும்பத்துடன் சந்திக்க ஏற்பாடு செய்ததுடன், அந்த மாணவிக்கு, அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ. வெங்கடேசன், திருவேடகம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் மாணவிக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

scroll to top