மதுரையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பயிற்சி முகாம்

கர்ப்பிணி தாய்மார்களுக்கான யோகா பயிற்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி, ஆகியோர் துவக்கி வைத்தார்கள். மதுரை மாநகராட்சி செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று (21.12.2021) துவக்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மருத்துவம் சார்ந்த பணிகள் மிகச்சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2500 அரசு மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் யோகா பயிற்சி அளிப்பதற்கு உத்தரவிட்டு உள்ளார்கள். அதன்படி, முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி செல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சியை அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைத்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ காலங்களில் எவ்வாறு சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்வையிட்டனர். இந்த யோகா பயிற்சி முறை கர்ப்பிணி தாய்மார்களின் உடல் நலத்தை சீரான முறையில் பராமரிக்கவும், சுகப்பிரசவத்திற்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதிதுறை இயக்குநர் மரு.கணேசன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மாநகராட்சி நகர்நல அலுவலர் திரு.
ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சாலிதளபதி, உதவி செய்தி தொடர்பு அலுவலர்
வினோத், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.பி.மாரியப்பன், மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top