மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில், பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில், இருந்து இன்று காலை 6.20 மணியளவில் திடீரென புகை வந்தது. பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனைக் கண்ட, பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் சலீம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும், ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் சீலிங் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது. ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் ரூ. 55 லட்சம் தப்பியது.. சம்பவம் குறித்து, எஸ். எஸ் .காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.