மதுரையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

மதுரை காமராஜர் சாலை குருவிக்காரன் சந்திப்பில் அருகில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஏடிஎம் வந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏடிஎம் வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்துவிட்டு, ஏடிஎம் உள்ளே சென்று ஏடிஎம் மிஷின் கதவை உடைத்து திறக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

இந்த முயற்சியில், அவர் ஈடுபட்ட போது வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி ஒலித்த நிலையில் அங்கிருந்து தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ரோந்தில் இருந்த இரவு ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தப்பிக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
போலீசார் அவரை விரட்டி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விரைந்து செயல்பட்டதால் ஏடிஎம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.

scroll to top