மதுரையில் இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளர்களும் நூதன முறையில் தங்களுடைய வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை திருப்பரங்குன்றம் 94- வது வார்டு காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் ஸ்வேதா சத்யன். முதுகலை பட்டாதாரியான இவர் ,திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். திருநகர் 94 -வது வார்டு படுதியில் வாக்குகள் சேகரிக்க கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். திருநகர் 4-வது பேருந்து நிறுத்தம் அருகே பொது மக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த இஸ்திரி கடையில் இஸ்திரி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண் வேட்பாளராக இந்தாலும், வாக்களர்களிடையே நேரிடையாக தொடர்பு கொள்வது மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா சத்தியன் செயல்பாடு பொதுமக்களை மிகவும் கவர்கிறது.

scroll to top