மதுரையில் இறந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு பிரார்த்தனை

madurai1.jpg

மதுரையில், அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சென்னையில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் அட்சயா டிரஸ்ட்டின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் காஞ்சி மகாபெரியவர் சன்னதியில் வைத்து சென்னையில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top