மதுரையில், இந்திராகாந்தி நினைவு தினம்

WhatsApp-Image-2021-11-01-at-12.34.40-PM.jpeg

மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜான்சிராணி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்பி வரதராஜன், ஊடகப் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பால் ஜோசப் முன்னிலையில், மனித உரிமை துறை மாநில பொதுச்செயலாளர் பிஜே காமராஜ் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் முத்துப்பாண்டி பஞ்சாயத்து ராஜ் மாவட்டத் தலைவர் முத்து குமார் விவசாய அணித் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் போஸ் மூவேந்திரன், கிருஷ்ணகுமார், பகுதி தலைவர்கள் ஆர் எ சுந்தர்ராஜன், பூக்கடை கண்ணன், கோபிநாத், பிச்சாலு, இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ், வார்டு தலைவர்கள் குமரகுரு, வீர வாஞ்சிநாதன், நாகேந்திரன், செல்வம் சக்தி மற்றும் திரளான காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

scroll to top