மதுரையில் அதிமுகவினர், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மனு பெற்ற முன்னாள் அமைச்சர்

மதுரை நகரில் நடைபெறவுள்ள மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு, அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம், விருப்ப மனுக்களை, மதுரை நகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பெற்றுக் கொண்டார்.
அப்போது,
மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் எம். எஸ். பாண்டியன், நிர்வாகிகள், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருகின்ற மதுரை மாநகராட்சி தேர்தலில், அதிமுக அதிக இடங்களை பிடிக்கும். அதிமுக ஆட்சிக் காலத்தில், மதுரை மக்களின் நலனுக்காக மேம்பாலங்கள், குடிமராமத்து திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற வெற்றித் திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியுள்ளோம். மதுரை மக்கள் எங்கள் கட்சியை தேர்தலில் ஆதரிப்பார்கள் என்றார்.

scroll to top