மதுரையில் அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா

women-1.jpg

மதுரையில் அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பழனி குமார் மதுரை ஐகோர்ட் வக்கீல் சங்க நிர்வாகி கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை தாங்கினார்

நிகழ்ச்சியை மதுரை ஹைகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்து பேசும்போது பெண் வக்கீல்கள் கட்சிக்காரர்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்பது வழக்குகளை தயார் செய்வது போன்ற வேலைகளை மட்டும் செய்தால் வக்கீல் தொழிலில் பிரகாசிக்க முடியாது தங்களது கட்சிக்காரர்களுக்காக கோர்ட்டில் ஆஜராகி சட்ட நுணுக்கங்களை எடுத்து கூறி கடுமையாக வாதாட வேண்டும் அப்போதுதான் வக்கீல் என்ற அங்கீகாரம் கிடைக்கும் அதேபோல ஏதாவது ஒரு துறை சட்டங்களில் நல்ல புலமையை பெற்றிருக்க வேண்டும் உதாரணமாக நிர்வாக சட்டம் சிவில் கிரிமினல் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் மற்ற வக்கீல்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் குறிப்பிட்ட வக்கீல் இடம் கேட்டால் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் தொழிலில் மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டும் வகையில் சிறந்து விளங்க வேண்டும் கட்சிக்காரர்களிடம் உண்மையை பேசினால் தான் வக்கீல்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் தொழிலில் கவனம் இருந்தாலும் பெண் வக்கீல்கள் உரிய வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் உடல் நிலையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பேசினார் பின்னர் மனநல மற்றும் குடும்ப நல ஆலோசகர் சித்ரா பல்வேறு அறிவுறுகளை வழங்கினார் பெண் வக்கீல் சங்கத் தலைவர் ஆனந்தவல்லி மதுரை கல்லூரி பள்ளி செயலாளர் பார்த்தசாரதி ஆகியோரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சபிதா வனிதா அகிலாண்டேஸ்வரி தங்கம் ஷீலா உள்ளிட்டோர் செய்திருந்தனர்

scroll to top