மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மேம்பாலத்தில் இருந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு

WhatsApp-Image-2021-12-12-at-20.14.03.jpeg

மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி. இவர், அலங்காநல்லூரில் இருந்து சிந்தாமணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில், மதுரை பெரியார் பேருந்து நிலைய மேம்பாலத்தில் நெசவுபாண்டி என்பவருடன் மதுபோதையில் வேகமாக வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் மேம்பலத்தில் இருந்த தடுப்புச் சுவரில் நிலைதடுமாறி மோதிய விபத்தில் பாலத்திலிருந்து கீழே விழுந்த இருவருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top