மதுக்கடைகளுக்கு புதிய விதிமுறைகள்

கொரோனா பரவலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும்.மதுபானக்கடையில் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. இரண்டு வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தூர சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மதுபான சில்லறை விற்பனைக்கடைகளில் கூட்டமாக இருக்கக் கூடாது.
பணியாளர்கள் மதுக்கடைகளில் முகக் கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும்.

scroll to top