மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த அதிமுக வினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத திமுக அரசையும், கோவை மாநகராட்சியையும் கண்டித்து கோவை மாவட்ட அதிமுக சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியது:- கோவை மாவட்டமே திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்திற்கு தலை வணங்குகிறேன். அதிமுக எழுச்சி பெற்றால் யாரும் தாங்க மாட்டீர்கள். ஆட்சி அமைத்த 7 மாதங்களில் மிகப்பெரிய எதிர்ப்பை திமுக அரசு சந்தித்துள்ளது. தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட சாலை அடிப்படை வசதி, வேலை உத்தரவு வழங்கி நிறுத்தி வைத்துள்ளது. ஸ்மாட் சிட்டி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனை உடனடியாக பணியை தொடர வேண்டும். கோவை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். எங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழி வாங்குகிறது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சில ஊடகங்களை தவிர்த்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்  என்று கூறினார்.  வாக்குறுதி கொடுத்தார்கள். ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு அதில் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்1 லட்சம் மேற்பட்ட  கலந்து கொண்டனர். . இந்த நிலை தொடருமானால் மீண்டும் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள்  அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார். சே,தாமோதரன், தனபால். கே.ஆர்.ஜெயராம். ஏ.கே.செல்வராஜ். அமுல் கந்தசாமி, கந்தசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். 

scroll to top