மக்கள் நலனில் அக்கறையில்லாத மேயர் பதவி விலக வேண்டும் – ​அ.தி.மு.க.கவுன்சிலர் பிரபாகரன் கோரிக்கை

WhatsApp-Image-2023-05-15-at-19.03.34.jpg

​கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில்  மாநகராட்சி  விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. துணை மேயர் இரா.வெற்றி செல்வன், ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கிய போது அ.தி.மு.க.கவுன்சிலர் பிரபாகரன் கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி வருவதை கண்டு கொள்ளாமலும், கடந்த 4 மாதமாக கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்தாமலும் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் மக்களின் நலனி​​ல் அக்கறை இல்லாமல், மக்கள் நலப்பணிகளுக்கான டெண்டர்கள் செயல்படுத்தாமல் இருப்பதால் மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் செயல்படுகிறார் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மாநகராட்சி கூட்டத்தில்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று கவுன்சிலரை பேச விடாமல் கூச்சல் போட்டனர். இதை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், திட்டங்களுக்கான ஒப்பந்தம் கோருதல், பாதாள சாக்கடை தூர்வாருதல், மாநக பள்ளிகள் பராமரிப்பு அண்ணா, எம். ஜி.ஆர். மார்க்கெட் மற்றும் சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் ஆகியவை பராமரிப்பு செய்தல் உள்பட தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெற்றது.

scroll to top