திருச்சுழி தொகுதியில், மக்களை பாதிக்ககூடிய நச்சுக்கழிவு ஆலைகள் இயங்க அனுமதிக்க
மாட்டோம் என்று, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், புல்வாய்க்கரையில் திமுக அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது.. தி.மு.க இரண்டாண்டு ஆட்சியிலே முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து அவற்றை சிறப்பாக நிறைவேற்றியும் வருகிறார். மேலும், திருச்சுழி தொகுதியில், தொழில் முன்னேற்றத்திற் காக சிப்காட் அமைக்கப்படவுள்ளது. மேலும் ,காரியாபட்டி, முடுக்கன்குளம் அருகே மருந்து கழிவுகளை எரியூட்டும் நிலையம் இயங்கிவந்தது.
இந்த ஆலையில், இருந்து வெளிவரும் நச்சுப் பொருட்களால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலத்தடி தண்ணீர் மாசு அடைந்துவிட்டது திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது காரியாபட்டியில் நடைபெற்ற போராட்டத்தில், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக இந்த ஆலை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தேன். ஆட்சிக்கு வந்தவுடன் நச்சுக்கழிவு ஆலை நிர்வாகம் நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடரப்பட்டது.. கடந்த மாதம் வழக்கு முடிவுற்றதும், உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாயை அதிகரிகளிடம் மீண்டும் இந்த ஆலை இயங்க அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்தேன். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவித நச்சு கழிவு ஆலைகள் அமைக்க இனிமேல் அனுமதிக்கமாட்டோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.