மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் உத்தரவு

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், வீட்டு வரி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி, குடிநீர், பாதாள சாக்கடை சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 116 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஆணையாளரால், நேரடியாக பெறப்பட்டது.
பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து, பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.
சென்ற குறைதீர்க்கும் முகாமில், பெறப்பட்ட 117 மனுக்களில் 105 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில், உதவி ஆணையாளர்
சுரேஷ்குமார், செயற்பொறியாளர்
பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் .மனோகரன், சுகாதாரஅலுவலர்
விஜயகுமார், உதவிப்பொறியாளர்
குழந்தைவேலு உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

scroll to top