மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

மதுரை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி . இவர் கடந்த 2015 ஆண்டு தன்னுடைய 12 வயது மகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாவட்ட போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் தற்போது நீதிபதி ராதிகா குற்றவாளியான தந்தைக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளி கணேசமூர்த்தியை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

scroll to top