போலீஸ் தனிப்படையின் முயற்சியால், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்பு

மதுரை மாவட்டத்தில் தாக்கியுள்ள கணக்கு வழக்குகளில் கண்டுபிடிக்கப்
படாமல் இருந்து வரும் வழக்குகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வீ.பாஸ்கரன்,
உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில், ஊமச்சிகுளம் கோட்டத்தில் உள்ள கருப்பாயூரணி, சிலைமான், ஒத்தக்கடை காவல் நிலையங்களில் தாக்கலாகி இருந்த கன்னக் களவு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில், தனிப்படையினர் சீரிய முயற்சியினால், மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் ராமச்சந்திரன் வயது 34 .மற்றும் அவரது உறவினரான கருப்பபிள்ளையேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பழனி முருகன் 24. ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தபோது, மேற்படி, காவல்
நிலையங்களில் தாக்கலாகி இருந்த 17 கன்னக் களவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் விசாரணையில், மேற்படி வழக்குகளில் களவுபோன சொத்துக்களான 114 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் 300 கிராம், ரூபாய் 2 லட்சம் ரொக்கம், சாம்சங் எல்.இடி .டிவி. 1 மற்றும் அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது. பின்னர் ,மேற்படி இரண்டு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி வழக்குகளில், திறம்பட செயல்பட்ட தனிப் படையினர்களான ஒத்தக்கடை காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திக், சிறப்பு சார்பு ஆய்வாளர், பிச்சை பாண்டி தலைமை காவலர்
காந்தி ஆகியோர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வீ.பாஸ்கரன், வெகுவாக பாராட்டினார்கள்.

scroll to top