போலியோ முகாம் ஜனவரி 23லிருந்து பிப்ரவரி 27க்கு மாற்றம்

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23-லிருந்து பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படடுத்தப்பட்டுல்லத்து.  முழு ஊரடங்கு நாட்களில் மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி ஞாயிறு அன்று நாடெங்கும் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக மாநில அரசுகள் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த முகாம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டன.மத்திய அரசு இதை ஒப்புக் கொண்டு, வரும் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

scroll to top