போதையை ஒழிக்க ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம்: மீண்டுமொரு தேசிய சாதனை நிகழ்த்திய விஷ்ணுராம்

Pi7_Image_DSC04631f.jpg

THE KOVAI HERALD:

கோவையைச் சேர்ந்த விஷ்ணு ராம் என்பவர் “போதைப்பொருள் இல்லா தமிழகம்” எனும் சைக்கிள் பயண பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன்படி ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் பயணித்து சாதனை செய்துள்ளார். ஹைதரபாத்தில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கிய விஷ்ணுராம் குர்னூல், பெங்களூரு வழியாக கோவை வந்தடைந்தார். கோவை வந்த விஷ்ணுராமை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவருடன் விமான நிலைய பகுதியிலிருந்து அவிநாசி சாலை வழியாக காவல் துறை ஆணையர் அலுவலகம் வரை சைக்கிள் ஓட்டியபடி வந்தார். இதில், பொதுமக்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து விஷ்ணு ராம் கூறு கையில், ‘அண்மை யில் முதல்வர் கூறிய போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் பிரச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனை பயணத்தை துவங்கியதாக தெரிவித்தார். ‘‘இதற்கு முன்பு இந்த ஆயிரம் கிலோமீட்டர் நாக்பூர் அமித் சம்பத் என்பவர் நாற்பத்திரெண்டு மணி நேரம் 30 நிமிடங்களில் செய்திருக்கிறார். அந்த ரெக்கார்டை இன்னெய்க்கு முப்பத்தியேழு மணி நேரம் ஐம்பத்தி நாலு நிமிடத்தில் சைக்கிள் பயணம் செய்து முறியடித்திருக்கிறேன். ஆகஸ்ட் மாதம் நம்ம முதல்வர் ஸ்டாலின் போதைப் பொருள் விழிப்புணர்வை தொடங்கி வைத்தார். அதை அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மட்டுமல்ல, நம்மைப் போன்ற பொதுமக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும், என்ற எண்ணத்தில் இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். அவரவர் துறைகள் வாயிலாக இந்த போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்க தன்னாலானதை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து. அதை வலியுறுத்தியே இந்த சைக்கிள் பயணத்தை துவக்கினேன். இதை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரன் தொடங்கி வைக்கும்போது 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்கள் திரண்டு வந்து போதைக்கெதிரான கோஷங்களை எழுப்பி, உறுதிமொழியேற்று வழியனுப்பி வைத்தனர். பெங்களூரில் இரண்டு மூணு காலேஜ் சென்று அங்கேயும் விழிப்புணர்வு ஊட்டினேன். பெங்களூரும், ஹைதரா பாத்தும் போதைப் பொருள் கலாச்சாரம் ரொம்ப மோசமாகப் போயிட்டிருக்கு. அதை வலியுறுத்திப் பேசினேன். நம்ம கோயமுத்தூர் அதை ஒப்பிடும்போது கொஞ்சம் பரவாயில்லை. அதுக்காக அலட்சியமாக இருந்து விடக்கூடாது. இங்கே இளையவர் முதல் பெரியவங்க வரை அது பரவியிருப்பது அச்சுறுத் துவதாக உள்ளது. மகள் ரக்‌ஷா எனது பத்து வயது பெண் குழந்தை ரக்‌ஷாவும், ஏர்போர்ட்டிலிருந்து சைக்கிளிங் செய்துட்டு என்னுடன் வந்தார். அடுத்த தலைமுறைக்கு இந்த மண்ணை சேதமின்றி வழங்க இதுபோன்ற விழிப்புணர்வு பேரணி பொருத்தமாக அமையும் என்று தெரிவித்தார். என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் எனது மனைவி சுவாதியும் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். குறைந்த நேரத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணம் மூலம் கடந்த சாதனையை விஷ்ணு ராம் படைத்ததாக இன்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜி.டி. விஷ்ணுராம் ஏற் கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள்முன்னிட்டு 82 மணிநேரம் 20 நிமிடத்தில் 5860 கிலோமீட்டர் தூரத்தை தேசிய நெடுஞ் சாலையிலேயே காரில் பறந்து தேசிய சாதனை புரிந்தார். இந்தகார் பயணத்தை கருணாநிதியின் சமாதியிலி ருந்து உதயநிதிஸ்டாலின் தொடங்கிவைத்தார். தயாநிதி மாறனும், அமைச் சர் மா.சுப்பிரமணியமும் இதில் கலந்து கொண் டனர். அதற்கு முந்தைய சாதனை இதே தூரத்தை 103 நேரத்தில் கடந்தவர் சுரேஷ் ஜோசப். அப்படி அவர் காரிலேயே பறந்த ஆண்டு 2016. அவரின் முந்தைய ரெக்கார்டை 2022-ல் இவர் முறியடித்திருக்கிறார். அதற்கு முன்பே 3 முறை சைக்கிளில் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆகஸ்ட் 2021-ல் கோவையிலிருந்து குமரி வரை 623 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளி லேயே ஒரே ஒரு நாளில் கடந்திருக்கிறார். அதே போல் 100 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 55 நிமிடங்கள், 42 விநாடிகளில் சைக்கிளிலேயே கடந்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். 160 மைல் தூரத்தை (160 கி.மீ) 4 மணி நேரம் 28 நிமிஷத்தில் கடந்துள்ளார். இப்படி சைக்கிள் சாதனை நிகழ்த்துவதற்கென்றே ஸ்பெஷல் ரக சைக்கிள்கள் இரண்டை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். அதில் ஒரு சைக்கிளின் விலை ரூ. 1.20 லட்சம். மற்றொன்றின் விலை ரூ. 2 லட்சம். அப்படி யென்ன இந்த சைக்கிளில் என்றால் அது ஓட்டிப் பார்க் கும்போதுதான் தெரியும், கியர் வீல் சிஸ்டம், ஸ்மூத் நஸ். சைக்கிள் ஓட்ட அலுப் பேயிருக்காது. சாலையில் போகும்போது வரக்கூடிய தகவல்களை பேசிக் கொண்டே போக அதில் ப்ளூ ட்டூத் எல்லாம் செய்து வைத்திருக்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான சங்கதி.

KAMALAKANNAN.S Ph.92443 17182  

scroll to top