பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் துவக்கம்- அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

SEP-19G-Honble-Health-Minister-Inspection-Photo.jpg

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் நிதியின் கீழ்  ரூ.1 கோடி மதிப்பீட்டில் 1000 LPM பிராண வாயு உற்பத்தி அலகு, ACT Grants நிறுவனத்தின் சிஎஸ்.ஆர் நிதியின் மூலம் ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் 667 LPM உற்பத்தி அலகு துவக்க நிகழ்ச்சி மற்றும் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆக்சிஜன் உற்பத்தி அலகினை மருத்துவ பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததுடன், மெகா தடுப்பூசி வழங்கும் முகாமினையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், பொது சுகாதாரம் நோய் தடுப்பு மற்றும் மருந்து துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம்,பொள்ளாச்சி சார் ஆட்சியர்தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தமிழக – கேரள மாநில எல்லையான மீனாட்சிபுரத்தில் சோதனை சாவடியில் தடுப்பூசி, RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதையும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவரும் முகக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தினை அமைச்சர் வெளியிட்டார்.

scroll to top