பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் – சோழர்கள் கோவை வருகை

PS-TEAM.jpg

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக ப்ரோமோஷன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இதில் இத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பேசிய விகரம் தான் படங்களுக்கு படம் உடலை மாற்றிக் கொண்டே இருப்பேன் என்றும் மஜா திரைப்பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றது, அப்போது ஜாலியாக இருந்து சாப்பிட்ட சாப்பாடு இன்று வரை தனது உடம்பில் உள்ளது என்றும் கூறினார். அந்நியன் திரைப்படத்தில் வரும் குரலில் பேசினதை நினைத்தாலே சிரிப்பு தான் வருகிறது என தெரிவித்த விக்ரம் பொன்னியன் செல்வன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.இது எங்க படம் என்றதை தாண்டி இது உங்க படம் என ஏற்றுக் கொண்டீர்கள். பி எஸ்2 படம் வெளியான பிறகு கோவையில் ஓடின அளவு வேறு எங்கும் ஓடவில்லை என கேள்விப்பட வேண்டும் எனவும் கூறினார். ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான், இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான்,நான் ஒரிஜினல் சூப் பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேடையில் பேசிய நடிகை திரிஷா, நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என தெரிவித்தார். நிகழ்ச்சியின் இடையே திரிஷாவிடம் பல்வேறு ரசிகர்கள் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து கேட்க லியோ, லியோ என முழக்கமிட்டனர்.

அப்போது திரிஷா, நான் தற்போது லியோ பட சூட்டிங்கில் இருந்து தான் வருகிறேன் எனவும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்ல இருக்காங்க என்று கூறி மற்றவற்றை லியோ நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம் என பதிலளித்தார். ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சில அவரிடம் கேட்கப்பட்டது. அதன்படி திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது..? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை நோக்கி கை நீட்டினார். கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ், இரண்டாவது உங்களுடைய சாப்பாடு, மூன்றாவது கோவையில் எப்போதுமே அமைதி உள்ளது என்றார் திரிஷா.

இந்நிகழ்வின் போது மேடையில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, எப்போது கோயம்புத்தூர் வந்தாலும் அன்பு பாசமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடைசியாக மிருதன் பட சூட்டிங்கிற்காக கோவை வந்தபோது சூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் தன்னை பார்க்க திரண்டு வந்ததால் திகைத்து போனேன்.தனக்கு கோவை இரண்டாவது வீடு என மனதார சொல்கிறேன். மக்கள், ரசிகர்கள், எப்போது அன்பாக நடந்து கொள்கின்றனர். PS2 ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது பிஎஸ்-1 திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனால் எங்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்து இருக்கின்றது. இதே மாதிரி PS2 க்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்.நிறைய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுபோது PS1 எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள், தான் PS 2 உடன் ஒப்பிட்டு பாருங்கள் என தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேடையில் பேசிய நடிகர் கார்த்திக், முதலில் அவரது முதல் படமான பருத்திவீரன் படத்தில் வரும் என்ன மாமா சவுக்கியமா என கோவை ரசிகர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் நம்ம ஊருக்கு வந்தால் சந்தோஷமாகத்தான் இருக்கும். பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் பொழுது சவால் ஒன்று இருந்தது என தெரிவித்த அவர், படித்தவர்களுக்கும் பிடிக்க வேண்டும் படிக்காதவர்களுக்கும் புரிய வேண்டும் இவை இரண்டும் பெரிய சவால்களாக இருந்தன. முதலில் படித்தவர்களுக்கு பிடித்து வைப்பது மிகவும் சிரமம் எனவும் படித்தவர்கள் புத்தகம் எடுத்துக்கொண்டு வருவார்கள், படிக்காதவர்கள் கதையை புரியவில்லை என கூறுவார்கள் எனவும் இரண்டு பேருக்கும் பிடிப்பது போல் படம் எடுப்பது மிகப்பெரிய விஷயம் இதனை இயக்குனர் மணிரத்தினம் மற்றும் அவரது குழுவினர் மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருந்த முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கின்ற விஷயங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் உள்ளது என்றும் இதில் அன்பான காதலும் உள்ளது ஆக்ரோஷமான காதலும் உள்ளது என தெரிவித்தார்.

scroll to top