பொன்னியின் செல்வன் பாகம் 2-க்கு ஏன் வரவேற்பு இல்லை

ps2.jpg

தமிழகம் முழுக்க தற்போது திரையிடப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் முதல் பாகத்தைப் போல் ரசிகர்களிடம் வரவேற்புப் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது திரையிடப்பட்ட பல்வேறு தியேட்டர்களில் முதல் இரண்டு காட்சிகளே முழுமையாக இருக்கைகள் நிரம்பவில்லை.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெய சித்ரா,நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சோழ – பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதன் காரணமாக முதல் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை முன் வைத்து இப்போது வெளியாக இருந்த பாகம் 2 க்கு படக்குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். பிற மொழிகளிலும் புரமோஷன் செய்யும் பணிகளை செய்தனர். ஆனால் அது பெரியதாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்பது திரையரங்குகளில் படம் வெளியான பின்பு தெரிய வந்துள்ளது. திருச்சியில் ஒரு தியேட்டரில் கூட்டமே இல்லை. இதே போல்தான் கோவையிலும் சில தியேட்டர்களில் காற்றாடியது.

வழக்கமாக அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும், ஆனால் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அரசு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. ஒரு சில திரையரங்குகளில் தற்பொழுது 11 மணி அளவில் திரையிடப்பட்டது. இது இப்படி வெறிச்சோட என்ன காரணம்? ரசிகர்கள் கூறியது:
PS – 1-க்கு போனமுறை இயல்பாக கிடைத்த விளம்பரம். இந்த முறை PS-2-க்கு இல்லை. போன முறை வலைத்தளப் பதிவர்கள் பொன்னியின் செல்வனை கொண்டாடி வைரலாக்கினார்கள். இந்த முறை அது சுத்தமாக இல்லை. முதல் பாகம் முடியும் போது ஒரு தொடர்கதையில் – தொடரும் போடும் போது அடுத்து என்ன என்று வாசக மனதில் ஏக்கம் பிறக்க வேண்டும்.

அந்த ஏக்கம் தீரவே அடுத்து புத்தகம் எப்போ வரும் என ஏங்கித் தவிக்க வேண்டும். அந்த உத்தியை கல்கி அந்தக் காலத்தில் மிகச் சிறப்பாக செய்திருந்தார். எனவே கல்கியின் பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றது. மணிரத்தினத்தின் PS திரைத் தொடர் அப்படியல்ல.
கல்கியின் கதையை ஒன்றுக்கு நாலுமுறை படித்திராதோருக்கு இவரின் படம் தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. அடுத்து PS – 2 தொடரும் என திரையில் போடும் போதும் எந்த ஏக்கமும், ஏங்கித் தவிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. PS -1 க்கே ஏண்டா போனோம் என்றிருந்த 80 சதவீதம் பேர் நிச்சயம் PS -2 Screen – க்கு எட்டியே பார்க்க வரவில்லை!’’ என்று தெரிவித்தனர்.

scroll to top