பொதுவேலை நிறுத்தம்: இந்த வாரம் 2 நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும்

Bank-Employee-Strike-update.webp

வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வங்கி சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நாடு தழுவிய 2நாள் வேலை நிறுத்தத்தால், அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் “தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத் கொள்கைகளுக்கு” எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார் மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் (மார்ச் 28, 29)  வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வேலைநிறுத்தத்தை   சி.ஐ.டி.யு. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி எல்.பி.எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த இந்திய தொழிற்சங்க கூட்டப்பமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அமேலும் இந்த வேலை நிறுத்ததில்  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டம் மற்றும் வங்கி சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

scroll to top