பொங்கல் பரிசுத் தொகை வழங்காத திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு

செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, 2015 ல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் திமுக அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கவில்லை. தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தமிழக மக்களுக்கு ரூ. 2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படவில்லை இது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நம்பி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 13 லட்சம் பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கூறி ஏமாற்றி உள்ளது இந்த அரசு. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த பகுதிகளிலேயே அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளை காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு மூடியுள்ளது. திமுக அரசின் இந்த செயல்பாடுகளை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

scroll to top