பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் கரும்பு விவசாயிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், முன்னர்அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக்கரும்பும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.