அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2020-ம் ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் உட்பட 2,363 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதாகவும், 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரூ 2500 நிதி உதவி உட்பட 5,604 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும், வீடியோ ஆதாரங்களை முன்வைத்து, அரசு தரமற்ற பொருட்களை வழங்கி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்ச்சாட்டி உள்ளார்.