மதுரையில் பொங்கல் தொகுப்புக்கான மஞ்சல் பைகள் இல்லாததால், தொகுப்பு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொகுப்பில் 21 பொருட்கள் இருப்பதாக அறிவித்து தற்போது, குறைவான எண்ணிக்கையில் வழங்கப்படுவதாகவும், அனைத்து பொருட்களும் தரமற்றதாக வழங்கப்படுவதாக கூறி பொருட்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட வந்த பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கிவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து தரமற்ற பொருட்களை செய்தியாளர்களிடம் காட்டினார். பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள்.