பொங்கல் தொகுப்பில் எந்த குறைபாடும் இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

IMG-20220209-WA0001.jpg

திண்டுக்கல் செல்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பொங்கல் தொகுப்புகள் திமுகவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு:
100% எந்த குறைபாடுகளும் இல்லாமல் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை.
தரமற்ற பொருட்கள் குறித்து வீடியோ வந்தது குறித்த கேள்விக்கு:
அனைத்து வீடியோக்களும் தரமற்ற குற்றச்சாட்டு எந்த கிராம மக்களும் குறைபாடு சொல்லவில்லை.
தமிழக விவசாயிகளிடம் வெள்ளம் வாங்காமல் குஜராத்திலிருந்து வெள்ளம் வாங்கியது குறித்து சீமான் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு:
தரமான வெள்ளங்கள் வாங்கப்பட்டு எல்லா மக்களுக்கும் பயன்பட்டுள்ளது நீங்களும் பெற்றிருப்பீர்கள். வேண்டுமென்றே ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குறைபாடு சொல்கிறார்களே தவிர அதில் துளி உண்மை இல்லை. கடந்தாண்டு அதிமுக ஆட்சியில் அவர்கள் கொடுத்தது குறித்து அவர்களிடம் கேளுங்கள்.என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினர்.

scroll to top