பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இன்று அதிகாலை அருள்மிகு நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து அருள்மிகு நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு சிறப்பாக காட்சி அளிக்கவே இரவு முதலே இந்த காட்சிக்காக காத்திருந்த ஏராளமான பக்தர்கள் எம்பெருமானை பக்தி பரவசத்துடன் துதித்து சென்றனர்.

scroll to top