பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம்

p2.jpeg

கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பேரூர் பட்டீசுவரர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் தேரில் எழுந்தருளிநர். இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

scroll to top