பேரறிவாளனுக்கு ஸ்டாலின் தந்த கட்டிப்பிடி வைத்தியம்:காங்கிரஸ் திமுக உறவில் விரிசலா?

Pi7compressedperari.jpg

THE KOVAI HERALD 

ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் எழுவரில் ஒருவரான பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்ட விவகாரம் பெரும் அரசிய லாகியுள்ளது. இதன் நிமித் தம் தமிழக அரசியலே மாற்றம் கொள்ளுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே பேரறி வாளனை விடுதலை செய்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருந்தும் கூட, இதில் தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை ஊதி பெரிதாக்கிக் கொண்டி ருக்கின்றன அரசியல் கட்சிகள். ஆளுங்கட்சியான திமுக இந்த விடுதலையை முழுமையாகக் கொண்டா டியிருக்கிறது, தன் விடுதலைக்குப் பாடுபட்ட முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் சந்தித்து நன்றி கூற, அவரை ஆரத்தழுவி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தார் முதல்வர். ‘ஆயிரம்தான் இருந்தாலும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்ற வாளி அவர். அவரை நாட்டின் முதல்வரே ஆரத்தழுவி வரவேற்பது என்பது உவப்பானதல்ல!’ என்று சமூக வலைத்தளங்கள் விமர்சனங்களை அள்ளி வீசியிருக்கின்றன. அதேநேரம் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளன் சந்தித்து நன்றி கூறியிருக்கிறார். “தனது விடுதலைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், அன்றைய அதிமுக அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எடப்பாடி பழனிசாமியிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்” என்று கட்சி சார்பில் ஓர் அறிக்கை கொடுத்து தன்னடக்கம் காத்துக் கொண்டிருக்கிறார் அவர். காங்கிரஸ் தரப்பில்தான் மாபெரும் சோகம். கசப்பு. தன் தலைவரைக் கொன்ற வழக்கில் வந்த விடுதலை இது. இது எங்களுக்கு உவப்பானதல்ல. அதற்காக எங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கிறோம்!’ என்று சொல்லி வாயைக்கட்டி வாய்மூடிப் போராட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளனர் தமிழக காங்கிரஸார். பாஜக இந்த விஷயத் தில் கடுமையாக தாக்கவு மில்லை. மகிழ்ச்சியாக ஏற்கவுமில்லை. பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்பது போல, ‘‘இந்த தீர்ப்பை பா.ஜ.க ஏற்றுக்கொள்கிறது. நம் ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒரு மைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதி மன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகிறோம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த விவகாரத்தில் எந்த இடத்திலும் பேரறிவாளன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லி விடுதலை செய்யப்படவில்லை. அவர் 31 ஆண்டுகளாக சிறையில் வாடியும். குறிப்பாக 11 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் தினசரி இன்று நாம் தூக்கில் போட்டு விடுவார்களோ என்ற அச்சப்பாட்டிலும் கடந்த ஒரு கைதி என்ன மனநிலைக்கு ஆளாகியிருப்பார் என்பதைக் கருத்தில் கொண்டே அவரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இப்பவும் கூட ஆளுநரே முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் பல வருடங்களாக அவர் அதை செய்யாமல் விட்டதால் அவருக்குப் பதிலாக தனக்கு உள்ள சிறப்பு அதிகார சட்ட விதிமுறையைப் பயன் படுத்தியே பேரறிவாளனை விடு வித்திருக்கிறது உச்சநீதிமன்றம். ஆனால் ‘அவரை விடுவித்திருக்கவே கூடாது; அவரை சாகும்வரை அப்படியே சிறையில் வைத் திருக்க வேண்டும்!’ என்ற கூக்குரல்கள் இடுகின்றனர் சிலர். அந்த வட்டத்திற்குள் இருக்கும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இப்போது இந்த விடுதலை விவகார கசப்பில் இவர்களின் உறவு தொடருமா, இல்லையா? என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதற்கு இதே ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியான சமயம் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறவு முறிந்து அப்போதைய குஜரால் ஆட்சியே கவிழ்ந்த சம்பவத்தை இதற்கு மேற்கோள் காட்டுகிறார்கள்…
அதவாது 1996ஆம் ஆண்டு நடந்த இந்திய பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பதவியேற்ற அடல் பிஹாரி வாஜ்பாயியின் அரசு உடனடியாகக் கவிழ்ந்தது. இதையடுத்து ஐக்கிய முன்னணியின் சார்பில் எச்.டி. தேவேகவுடா புதிய பிரதமராகப் பதவியேற்றார். தமிழ் மாநில காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த அரசில் பங்கேற்றன. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளித்தது. சீத்தாராம் கேசரி தலைமையிலான காங்கிரஸ் கட்சி திடீரென அந்த அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், ஐ.கே. குஜரால் புதிய பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், ஐ.கே. குஜராலுக்குப் பதிலாக ஜி.கே. மூப்பனார் பிரதமராக தி.மு.க. ஆதரவளிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இரு கட்சிகளின் தொண்டர் களும் மாறி மாறி கொடும்பாவிகளைக் கொளுத்தினர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையின் சில பகுதிகள் பத்திரிகை ஒன்றில் வெளியாயின. இதில் தி.மு.க. மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சரவையிலிருந்து அக்கட்சியை வெளியேற்ற வலியுறுத்தியது காங்கிரஸ். இதற்கு தி.மு.கவும் ஐ.கே. குஜராலும் மறுக்க, அந்த ஆட்சியே கவிழ்ந்தது. அன்றைக்கு தேசிய அரசியல் அரங்கில் யாருமே எதிர்பாராத சம்பவமாக அமைந்து விட்டது. ஏறத்தாழ இப்போதும் கூட ராஜிவ்காந்தி கொலை விவகாரமே திமுகவிற்கும், காங்கிரஸிற்குமான உறவில் கசப்பை ஏற் படுத்தியிருக்கிறது. ராஜிவ் கொலைக் குற்ற வாளியாக சிறையில் இருந்து 31 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி வெளியே வந்த நிலையில் திமுக தலைவரும், தமி ழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவ ரைக் கட்டித் தழுவி வாழ்த்தியிருக்கிறார். தமிழக காங்கிரஸாரோ பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணி கட்டி அமைதி அறப்போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதனால் திமுக அணியில் இருக்கும் கூட்டணி கட்சியினர் கூட காங்கிரஸை கிண்டல் கேலிக்கு உள்ளாக்கிப் பேசியிருப்பதைக் காண முடிந்தது. ‘அப்போ வேற வழியில்லை. இனி பாஜகதான் கூட்டணி சேரும் இடம்!’ என்ற வலைப்பதிவுகள் கூட காண முடிந்தது. அதையொட்டி காங்கிரஸ் கழற்றிக்கொண்டால் ஆளும் கட்சியான திமுக. மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் நெருக்கமாவது தவிர்க்க முடியாது என்று சொல்பவர்களை கூட காண முடிந்தது. அதைப் பற்றி பாஜக தரப்பிலோ வேறு விதமான ரியாக்ஷன். ‘‘பேரறிவாளன் அவர் ஒன்றும் குற்றமற்றவர் என்றோ, குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றோ விடுதலை செய்யப்பட்டவர் அல்ல. முழுக்க முழுக்க குற்றவாளிக்கான தண் டனையை முழுமையாக அனுபவித்து விட்டுத்தான் சட்டப்படி சட்டப்போராட்டம் நடத்தி வெளியே வந்திரு க்கிறார். அதை இவ்வளவு தூரம் திமுக தரப்பிலான புலிகள் அனுதாபக் கட்சிகள் கொண்டாடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் பாஜக அரசுடன் மோதல் போக்கில் இருந்தாலும், எங்கள் சட்டப்போராட்டமே வென்றிருக்கிறது என்பதை தேசிய அளவில் காட்ட பேரறிவாளன் தேவைப்படுகிறார்.
அதற்காகவே அவரை வைத்து திமுக கட்சியும் அரசியல் செய்திருக்கிறது. ஸ்டாலினும் ஒரு படி மேலே போய் பார்க்க வந்த வரை கட்டித்தழுவியும் உள்ளார். இதில் மீடியாக்களுக் கும் அரசியல் நோக் கம் இருக்கிறது. அதைத்தான் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு அமைதி அறப் போராட்டம் நடத் திய காங்கிரஸார் ஓரிரு நாட்களிலேயே அவர்களுடன் இணக்கம் கொண்டு விடுவார்கள்!’’ என்று தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ பேரறிவாளனை வைத்து தமிழக அரசியலில் பெரும் சதுராட்டமே நடந்திருக்கிறது அதனால் பேரறிவாளனுக்கு யாதொரு பயனுமில்லை. மாறாக துன்பங்கள்தான் அதிகம் என்கிறார்கள் அரசியல் நடுநிலையாளர்கள்.

S.KAMALAKANNAN Ph. 9244319559  

scroll to top