பெருங்குடி பகுதியில் பட்டாசு வெடித்ததில், கோழி கடையில் தீ விபத்து

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தினமும் அனைத்து இல்லங்களிலும் விளக்கு ஏற்றி வருகின்றனர்.  விடுமுறை நாள் என்பதால், மதுரையில் பலர் இல்லங்களில் மத்தாப்பு வைத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியில் உள்ள அன்னை தெரசா நகரில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மோகன் பாபு என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. விபத்து குறித்து, மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி இறந்துள்ளது. கடை பூட்டி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை.

scroll to top