கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அப்படிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு அவரை அவமதிக்கும் வகையில் செருப்பு மாலை அணிவிக்கப்படும் காவி நிற பொடி தூவியும் இருந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பெரியார் படிப்பகம் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த நிர்வாகிகள் போத்தனூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனிடையே அங்கு திரண்டிருந்த திராவிடர் கழகத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போத்தனூர் காவல் துறையினர் அக்கம்பக்கத்தில் உள்ள CCTV கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் யாரேனும் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஊரடங்கு நேரத்தில் கோவையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த சம்பவத்தால் கோவை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெரியார் சிலைக்கு செருப்பு மாலை: திராவிடர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
