தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தில் பெரியகுளம் ராயல் அரிமா சங்கம், தேனி வைகை ஐ கேர் & ஆப்டிக்கல்ஸ் மற்றும் தேனி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் சம்பந்தமான பிரச்சனைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை இலவசமாக வழங்கினார்கள். கண் குறைபாடு உள்ளவர்கள்,கண் கண்ணாடி அணிந்திருப்பவர்கள்,தீராத தலைவலி,மாறுகண், சர்க்கரை நோய்,கண் நீர் அழுத்தம்,கண்புரை,காண்டாக்ட் லென்ஸ் பொறுத்தியுள்ளவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள், குறிப்பாக டிவி,செல்போன், கம்ப்யூட்டர் அதிக நேரம் பார்ப்பவர்கள்,மற்றும் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் பங்கு பெற்று தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை பெற்று, பரிசோதனையின் மூலம் பயனடைந்தனர்.
முகாமில் கண் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு 20% தள்ளுபடி விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பெரியகுளம் ராயல் அரிமா சங்க தலைவர் பொறியாளர். ஒ.சந்திரமோகன், செயலாளர் அரிமா. லெ.பாண்டியராஜன், பொருளாளர். பொறியாளர்.பெ. பாலசுப்ரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் வைகை ஐ கேர் முதன்மை மேலாளர் வெங்கடேசன், மக்கள் தொடர்பு அலுவலர் குமரேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.