பெங்காலி மொழியில் பக்தி பாடலாக வெளியாகிய “நிலா அது வானத்து மேலே”

  நிலா அது வானத்து மேலே பாடலை பெங்காலி மொழியில் பக்தி பாடலாக வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  
மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தில் இடம் பெற்ற நிலா அது வானத்து மேலே பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும. இந்தப் பாடல் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கக் கூடிய  பாடல்களில் ஒன்றாகும்.இந்தப் பாடலின் பின்னணி குறித்து ஒரு கதை உண்டு. நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடல் சூழ்நிலைக்காக இளையராஜாவால் உருவாக்கப்பட்ட இசைதான் நிலா அது வானத்து மேலே பாடல்.தென்பாண்டி சீமையிலே பாடலை இளையராஜா இசையமைத்தார். இருப்பினும் நன்றாக நடனமாடக் கூடிய பாடல் ஒன்று உருவாக்கி தருமாறு இளையராஜாவை கேட்டிருக்கிறார் மணிரத்னம். அப்படி உருவானது தான் நிலா அது வானத்து மேலே பாடல். இந்நிலையில் இந்தப் பாடலின் இசையை கொண்டு பெங்காலி மொழியில் நவராத்திரி சிறப்பாக பக்தி பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை உஷா உதுப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.  

scroll to top