பூனை காணவில்லை:கண்டுபிடித்து தருபவருக்கு ௹ 5000 வழங்கப்படும்

கோவையில் பல்வேறு பகுதியில் பூனை காணவில்லை கண்டுபிடித்து தருபவருக்கு௹ 5 ஆயிரம் வழங்கப்படும் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியில் ஒருவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான வெளிநாட்டு பூனை திடீரென்று காணாமல் போனது. இதனால் கவலை அடைந்த பூனையின் உரிமையாளர் கோவையில் பல பகுதிகளில் இதுகுறித்து சுவரொட்டி ஒட்டி உள்ளார். அந்த சுவரொட்டியில் பூனையின் பெயர், வயது அடையாளம் எந்த தேதியிலிருந்து காணவில்லை .யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் சுவரொட்டியில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். கண்டு பிடித்தவர்களுக்கு ரூ 5 ஆயிரம் பரிசு அளிக்கப்படும். பூனையின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள்ஓட்ட ப்பட்ள்ளது .

scroll to top