‘புல் மெஷின்’ நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்மார்ட் வாகனம் அறிமுகம்

IMG-20220808-WA0032.jpg


தரமான ‘Backhoe Loaders’ பின்புறம் தோண்டி முன்புறம் பாரம் சுமக்கும் வகையில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது கோவையை சேர்ந்த ‘புல் மெஷின்’ பிரைவேட் லிமிடெட் நிறுவனம்.தற்போது மேம்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் மாடலை இந்த நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

75 எச்பி கிர்லோஸ்கர் என்ஜின் பொருத்தப்பட்டு தனித்துவமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த வாகனம்.இதில் பொருத்தப்பட்டுள்ள பிஸ்டன் பம்ப் தேவையான அளவு சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில் முற்றிலும் மின்னணு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் அதிகம் சேமிக்க முடியும். நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள கிர்லோஸ்கர் இஞ்ஜின், மாறுபட்ட கோணங்களில் இயங்கக்கூடிய ஸ்டேரிங், 40 கிலோமீட்டர் வேகம் வரை இயங்கும் வகையில் வடிவமைப்பு, ஒத்திசையில் இயங்கும் கியர் பாக்ஸ், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓட்டுநர் கூண்டு, வேலைக்கும், தேவைக்கும் ஏற்றவாறு பக்கெட்களை மாற்றி இணைக்கும் வசதி, அதிக வலுவையும் அழுத்தத்தினையும் தாங்கும் விதமாக வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த வாகனம் கொண்டுள்ளது.தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாத அளவு பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த வாகனம் கொண்டுள்ளது.

‘புல் நிறுவனம்’ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக டிராக்டரோடு இணைக்கப்படும் தரமான உபகரணங்கள் கட்டுமான துறைக்கான இயந்திரங்கள் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்கள் என மூன்று வகையான இயந்திரங்களை தனது மூன்று தொழிற்சாலைகள் மூலமாக தயாரித்து மார்க்கட் செய்து வருகிறது.250 இன்ஜினியரிங் வல்லுநர்கள், 1,000 தொழிலாளர்களின் கடின உழைப்பால் உதயமாகும் இந்த தயாரிப்புகள் இந்தியா முழுவதும் 76 விற்பனை கூடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. உள்நாட்டில் பலராலும் ஈர்க்கப்பட்ட நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களும் ஈர்க்கப்பட்டு 55 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

‘புல் நிறுவனம்’ டிராக்டரோடு இணைக்கப்படும் உபகரணங்களின் விற்பனையில் 46 ஆயிரம் வாடிக்கையாளருடன் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. ‘பேக் ஹோ’ லோடர்களின்( ‘Backhoe Loaders’) உற்பத்தியிலும் இந்த நிறுவனம் இந்தியாவில் மூன்றாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தை நோக்கி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கோவை நேற்று நடந்த விழாவில் ‘புல்’ நிறுவனத்தின் தலைவர் ஏ.வி. வரதராஜன், வாகனங்களை அறிமுகம் செய்து வைத்தார். நிர்வாக இயக்குனர் பார்த்திபன், இயக்குனர், ரமாபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

scroll to top