புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தகராறில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஐராவதநல்லூர் முனியாண்டி கோவில் அருகே ஆங்கில புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது சூசையப்பர் தெருவை சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார் , பதினேழுவயது சிறுவன்,அதேபகுதியை சேர்ந்த
நாகரத்தினம் இவர்களுக்ககுமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் முன்விரோதத்தில் செந்தில்குமாரை இவர்கள் மூவரும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார், 17வயது சிறவன் , நவரத்தினம் 20 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.