தெலங்கானா மாநிலத்தில் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த அவர், புதுச்சேரி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முன்னதாக காவலர்களின் மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்றிவைத்து தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். புதுச்சேரியில் வீர செயல் புரிந்த காவலர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி குடியரசு நாள் விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை. பொதுமக்களுக்கும் அனுதி வழங்கப்படவில்லை.