புதிய தடுப்பூசிகள் ஏதும் இல்லை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான மாணவர்கள் தரவரிசை பட்டியல் மதுரையில் வெளியிடப்பட இருக்கிறது,
தமிழக முதல்வர் ஏற்கனவே, நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி வழங்கும் திட்டத்தினை தமிழகம் முழுவதற்கும் மதுரையிலிருந்து துவக்கி வைக்கப்பட இருக்கிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என மத்திய அரசு கூறியது குறித்த கேள்விக்கு:
குழந்தைகள் தடுப்பூசி போடும் பணியினை ஒன்றிய அரசு துவங்கினால் முதலில் பணியினை துவங்குவது தமிழக அரசாக இருக்கும்.
புதிய தடுப்பூசிகள் ஏதேனும் கொண்டு வரப்படும் என்ற கேள்விக்கு
புதிய தடுப்பூசிகள் ஏதும் இல்லை ஏற்கனவே ஒன்றிய அரசு வழங்கி வரும் covid shield மற்றும் covaccine மட்டுமே போடப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு:
தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சுகாதாரத் துறையின் சார்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்தது குறித்த கேள்விக்கு:
இது ஒரு தவறான அணுகுமுறை இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த கேள்விக்கு
இதுகுறித்து ஒன்று இரண்டு புகார்கள் வந்த உடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு கொடுத்த நிலையில் கோவில்களில் சில திருவிழாக்கள் தடை செய்தது குறித்த கேள்விக்கு:
தளர்வுகள் மூலம் சகஜ வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது இருந்தாலும்கூட ஓமிகிரான் போன்ற நோய் அச்சுறுத்தலால் சுய கட்டுப்பாட்டை தொடர்வது என்பது அவசியமான ஒன்று.
வரவிருக்கும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவதால் ,நோய் தொற்று ஏற்படும் அபாயம் குறித்த கேள்விக்கு:
விதிகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் அதையும் மீறி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைகளை காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, தீபாவளி பண்டிகையின் போது நானும் சுகாதாரத்துறை செயலாளரும் நேரடியாகவே கடைகளுக்குச் சென்று நடவடிக்கை விதிகளை கடைபிடிப்பது குறித்து, வலியுறுத்தி
யுள்ளோம். நோய்த்தொற்றின் அச்சம் தொடர்ந்து இருந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் நிலையில் பள்ளி கல்லூரிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் இந்த படுமா என்ற கேள்விக்கு:
நோய்தொற்று பரவுவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்றி வருகின்றனர் மேலும், கூடுதல் கவனத்தோடு பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை குறித்த கேள்விக்கு:
இது சம்பந்தமாக கலந்தாலோசிக்க இன்று அதிகாரிகள் வருகின்றனர்.
முதலில் 50 மாணவர்கள் எந்த கல்லூரியில் சேர்ப்பது குறித்து இரண்டு அரசுகளும் கலந்து ஆலோசித்து வருகின்றன இதுகுறித்து, விரைவில் தமிழக முதல்வர் ஆலோசனை பெற்று முடிவெடுக்கப்படும்.

scroll to top