புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை 12ந் தேதி காணொளி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் வரும் 12ம் தேதி காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதன் மூலம், தமிழ்நாட்டிற்கு மேலும் 1450 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி போன்ற மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது இதில் பிரதமர் மோடி நேரடியாக கலந்துகொண்டு கல்லூரிகள் திறந்து வைக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனாத் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

scroll to top