புதிதாக 14 பேர் ஆந்திர மாநில அமைச்சர்களாக பதவி ஏற்பு

vlcsnap-2022-04-11-17h54m34s200-e1649692737921.jpg

ஆந்திரவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் 25 பேர்கள் கொண்ட அமைச்சரவை ஆட்சி செய்து வந்தது. பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 14 அமைச்சர்கள் ராஜிநாமா செய்த நிலையில், புதிதாக 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் நடிகை ரோஜாவும் ஒருவர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

scroll to top