மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர்ப்புற தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோழவந்தான் பேரூராட்சி 7வது வார்டு சுயேச்சை வேட்பாளர் செல்லப்பா சரவணன் பொதுமக்களிடம் புகார் பெட்டி வைத்து புகார் மனுக்களை பெற்று நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார் தண்ணீர் குழாய் சின்னத்திற்கு அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வாக்குகள் சேகரித்தனர். முதலியார் கோட்டை மேலத்தெரு, முதலியார் கோட்டை கீழத்தெரு, வெங்கடாஜலபதி நகர் ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
புகார் பெட்டி வைத்து நூதன முறையில் வாக்குகள் சேகரிப்பு
