பீளமேடு புதூர் பகுதியிலுள்ள ஆர்கே மில் நகர் பகுதியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய பட்டா மாறுதல் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினார்கள், அதனைத் தொடர்ந்து அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தகுதியான பொது மக்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் முகாமிலேயே அவர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, தொடர்ந்து கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தகுதியான பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் நகல்களை வழங்கினார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்,தெற்கு தாசில்தார் சரண்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பீளமேடு புதூரில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் : கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் நகல்களை வழங்கினார்
