பீளமேடு பாரதி நகரில் மழைநீர் வடிகால் அமைக்க எம்எல்ஏ., ஜெயராம் ரூ.19.80 லட்சம் ஒதுக்கீடு: பூஜையுடன் பணிகள் துவக்கம்

Pi7_Image_IMG-20220803-WA0093.jpg

THE KOVAI HERALD

L.Rajagopal

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ., கே ஆர் ஜெயராம் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக தற்போது சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுதியில்  வார்டு எண் 24 பாரதி நகரில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த பணிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.இப்பணிளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி எம் எல் ஏ.,  ஜெயராம் தலைமையில் நடந்தது. அதிமுக பீளமேடு பகுதி செயலாளர் உலகநாதன், வார்டு செயலாளர்கள் மனோகரன், லட்சுமணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

scroll to top