பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கயிட் வாட்ச் எனும் கருவி வெளியீட்டு விழா

கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருவியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். ஐஐடி மெட்ராஸ் மெட்டெக் நிறுவன முதன்மை செயல் அலுவலர் முத்து சிங்காரம், பி எஸ் ஜி கல்லூரி முதல்வர் டாக்டர் பிரகாசன்  ஆகியோர் கலந்து கொண்டனர். முதியவர்கள், பக்கவாத நோய் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்கும் போது தவறி விழும் பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கருவியை பயன் படுத்துவதன் மூலம் அவர்களது நடை கண்காணிக்கப்பட்டு அவர்கள் தவறி விழுவதிலிருந்து தவிர்க்க படுவார்கள்.நிகழ்ச்சியில் கருவியை வடிவமைத்த பேராசிரியர் எல்.எஸ். ஜெயஸ்ரீ கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி அவரின் ஆராய்ச்சி உதவியாளர்கள் ,பி எஸ் ஜி மருத்துவமனை டாக்டர் சுதா ராமலிங்கம், டாக்டர் தினகரன் ராய்,  டாக்டர்  பாலகிருஷ்ணன்,வழிகாட்டி டாக்டர் செல்வராஜ், டாக்டர் ஸ்ரீ ராமலிங்கம் மற்றும் பி.எஸ்.ஜி கல்லூரி பேராசிரியர்கள், அக்னா சுரேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

scroll to top