பி.எஃப்.ஐ அமைப்புக்குத் ஐந்தாண்டுகள் தடை: கோவையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிப்பு

Pi7_Image_image-1055copy.jpeg

இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎஃப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து பேரையும் இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்தனர். இதனிடையே, பி.எஃப்.ஐ மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பி.எஃப்.ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பி.எஃப்.ஐ அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், கோவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட கோவையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

scroll to top