பிறந்தநாளை முன்னிட்டு 215 பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைத்து சாப்பிட வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை

f1.jpeg

தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் பள்ளியில் பயிலும் 215 குழந்தைகளுக்கு உணவு சமைத்து சாப்பிட வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினார் .

கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் க.மகாலட்சுமி. இவரது பிறந்த நாள் வியாழக்கிழமை. இதை தனது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கொண்டாடும் விதமாக அவர்கள் அனைவருக்கும் மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி சமைத்து எடுத்து வந்து உடன் சாப்பிட்டு மகிழ்வித்திருக்கிறார். அவர்கள் பள்ளி மட்டும் இல்லாது அருகில் உள்ள ஐஓபி காலனி மாநகராட்சி பள்ளியில் பயிலும் 40 குழந்தைகளுக்கும், கல்வீரம்பாளையம் அரசு அங்கன்வாடிக்கு வரும் 25 குழந்தைகளுக்கும் உணவு சமைத்து வழங்கினார்.

மேலும், கல்வீரம்பாளையம் அரசு பள்ளிக்கு மாணவர்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் ட்ரம்களை வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக, இதை தொடர்ச்சியாக செய்து வருவதாகவும் கொரோனா காலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு மளிகை பொருட்கள், காய்கறி ஆகிய பொருட்களை  வாங்கி கொடுத்ததாகவும் கூறினார்.

scroll to top