பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்

sarath.jpg

​உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தமிழ் நடிகர் சரத்பாபு  காலமானார். அவருக்கு வயது முதிர்வு காரணமாக சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்பு இருந்தது. கடந்த மாதம் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடையவே, ஐதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை ​​அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிர் பிரிந்தது.  

1951ல் ஆந்திராவில் பிறந்த சரத்பாபு, தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். தந்தையின் ஹோட்டல் தொழிலை தொடர விரும்பாத அவர், கல்லூரி காலத்தில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார்.  எனினும், அவரது கிட்டப்பார்வை பிரச்சனையால், அந்த ஆசையும் நிறைவேறாமல் போனது. அந்த சமயம், அவரது அழகான தோற்றத்தை பார்த்து பலர் நடிக்க செல்லலாம் என கூற, அவரும் சினிமாவை நோக்கி நகர்ந்துள்ளார். 1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான சரத் பாபு பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேலும் சரத்பாபு டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இறுதியாக அவர் பிப்ரவரி மாதம் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார்.

scroll to top